Looking For :
Age:
to
Religion:
Father's Kovil:
Qualification:
dove

Presidency Service Club

PKM Youth Development Charitable Trust

பி.கே.மூக்கையாத்தேவர் இளைஞர் மேம்பாட்டு
அறக்கட்டளை, உசிலம்பட்டி
பதிவு எண்: 210 – 2010
இராஜாத்தி காம்ப்ளக்ஸ், எஸ்.டி.ஏ பள்ளி எதிரில்,
டி.பி சாலை, உசிலம்பட்டி

உசிலம்பட்டி பகுதி மிகவும் பின்தங்கிய ஒடுக்கப்பட்ட சுதந்திர போராட்ட மக்கள் வாழ்கின்ற பகுதி.அந்த மக்களின் வாழ்க்கை தரம் உயர,கல்வியால் உயர, வேண்டும் என அந்த பகுதி மக்கள் பலரும் நீண்ட நாட்கள் சிந்தித்துக் கொண்டிருந்தனர்.

மக்களின் வாழ்வு உயர சமுதாய நிலை உயர வேண்டும். சமுதாய நிலை உயர அரசுப் பணி அவசியம். அதிலும் மாவட்ட ஆட்சியர் காவல்துறையில் மாவட்ட கண்காணிப்பாளர் போன்ற உயர்பதவியில் பணி நியமனம் பெறுவதும் மிகவும் அவசியம்.

உயர்பதவி வகிக்க இந்திய அரசு ஆட்சிப்பணி தேர்வுக்கு பயிற்சி கொடுக்க வேண்டியது மிக முக்கியம் என்பதனை பின்தங்கிய உசிலைப் பகுதியிலிருந்து உயர்பதவியில் உள்ள திரு.அருன்சிபரத், ஐ.ஏ.எஸ்., திண்டுக்கல் அன்புகிறிஸ்தியான்,தெய்வதிரு.இராசேந்திரன்,ஐ.ஏ.எஸ்., திரு.ஜெயராமன்,வருவாய் ஆய்வாளர் திருமதி டாக்ட்ர் பாரதி, டாக்டர் சங்கீதா காமாட்சி அவர்கள் அடிக்கடி பேசி ஒரு நல்ல அமைப்பை ஏற்படுத்த வேண்டும் பயிற்சி வழங்கி பலரை உயர்பதவியில் அமர்த்த வேண்டும் என திட்டமிட்டனர்.

இந்தக் கருத்துருவை மையமாக வைத்து ஒரு அறக்கட்டளை ஏற்படுத்த மதுரை பிரசிடென்சி சர்வீஸ் கிளப் பொதுச்செயலர் திரு.பொன்விஜயன், திரு.கழுவன், திரு.ம.இளங்கோ அவர்கள் எஸ்.காசிமாயன்,ஐ.ஆர்.எஸ்., அவர்கள் தமிழ்மாநில பிரமலைக்கள்ளர் பேரவை மாநில பொதுச் செயலாளர் திரு.ஜெயச்சந்திரன்,திரு.ஐ.இராஜா, உசிலை, முனைவர்-பொன்-சூரியராஜன்,திண்டுக்கள், திரு.சந்திரசேகரன், திரு.ஜெயபாலன், கள்ளர் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர், ஓய்வு திரு.தனராஜ், திரு.ஜெயபால் மற்றும் பல நல்ல உள்ளங் கொண்டவர்கள் ஒன்று சேர்ந்து, ஒரு அறக்கட்டளை ஏற்படுத்த முடிவு செய்தனர்.

அந்த அறக்கட்டளை பி.கே.மூக்கையாத்தேவர் இளைஞர் மேம்பாட்டு அறக்கட்டளை எனப் பெயரிடப்பட்டது.முனைவர்-பொன்-சூரியராஜ் தலவராகவும்,தலைமை பொறியாளர் திரு..இளங்கோவன் அவர்கள் பொதுச் செயலாளராகவும், திரு.அன்புகிறிஸ்தியான் பொருளாளராகவும் தேர்ந்தேடுக்கப்பட்டனர்.

தொய்வு ஏற்படும் போதெல்லாம் செயலர் திரு..இளங்கோவன் அவர்கள் பெரும் முயற்சியால் பணம் கொடுத்து உதவியதோடு ஒரு லட்சம் ரூபாய் அறக்கட்டளை நிதியாக வழங்கியும் பல நல்ல உள்ளங்களிடம் புரவலர் நிதி பெற்றும் சிறக்கச் செய்து வருகின்றன. தலைவர் முனைவர்.பொன்.சூரியராஜன் ஒரு லட்சம் நிதி தர ஒப்புக்கொண்டு நிதி வழங்கி வருகின்றனர். பல நல்ல உள்ளங்கள் புரவலராய் தங்களை இனைத்து சிறக்கச் செய்து வருகின்றனர்.

இயக்குனர் இமையம் பாரதிராஜா அவர்கள் இந்த அறக்கட்டளை திறப்பு விழா சிறக்க கலந்துக் கொண்டு சமுதாயத்திற்கு பெருமை சேர்த்தார்.

பி.கே.எம் இளைஞர் மேம்பாட்டு அறக்கட்டளை நாள் ஆரம்பிக்கப்பட்டது.இதுவரை காவல் (22),ஆய்வாலர் (7),வங்கி அலுவலர் 10 பேர் தேர்ச்சி பெற்று பணிக்குச் சென்றுள்ளனர்.

ஜாதி, மதம், நிறம் பாராது இளைங்கர்கள் முன்னேற்றத்தையே முன் வைத்து இலவசமாக உசிலையில் நட்த்தப்பட்டு வருகிறது.

பி.கே.எம் இளைஞர் மேம்பாட்டு அறக்கட்டளை மனிதநேய சைதைதுரைசாமி,மாயா ஐ..எஸ்., அக்கடமி மதுரை, பசும்பொன் தேவர் கல்லூரியும் இணைந்து நடத்தும் சிவில் சர்வீஸ் பயிற்சி நடத்தப்படும்.

உசிலையில் ஆசிரியர் இராமசந்திரன் அவர்கள் பயிற்சி ஆசிரியர்களை தேர்வு செய்து முறைப்படுத்தும் மிகச் சிற்ந்த பணியை செய்து வருகிறார்.

தொடர் பயிற்சிகள் சிறக்க நடத்த திரு.சின்னக்கண்ணன் அவர்கள் திரு.ஜெயச்சந்திரன் அவர்கள், திரு..இராசு அவர்கள் உடன் இருந்து ஒருங்கிணைப்பாளராக சிறப்பு செய்து வருகின்றனர்.

ஆன்லைன் மூலம் ஆலோசனைகளும் புரவலர்களாக இணைய வழிமுறைகளும் கொடுக்கப்பட்டுள்ளது.

Kallar Kalvi Kazhagam

Chennai Vaal Pirmalai Kallar Peravai

Tamil Maanila Piramalai Kallar Peravai

Kallar Reclamation